ஏரியை தூர்வாரிய போது சிவலிங்கம் கண்டெடுப்பு


ஏரியை தூர்வாரிய போது சிவலிங்கம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 April 2021 8:31 PM IST (Updated: 11 April 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

ஏரியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரையில் சிவலிங்கம் தென்பட்டது.

பெங்களூரு, 

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் அருகே ஹூசூர் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது ஏரிக்கரையில் சிவலிங்கம் தென்பட்டது. உடனே அந்த சிவலிங்கத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் அதனை குழி தோண்டி எடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். மேலும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சிவலிங்கத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்தனர். அதன்பின்னர் பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், அந்த சிவலிங்க சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சிவலிங்கம் பழங்காலத்தை சேர்ந்தவை என கூறப்படுகிறது.

Next Story