மேல்நிலை குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மர்மநபர்கள்


மேல்நிலை குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மர்மநபர்கள்
x
தினத்தந்தி 11 April 2021 8:39 PM IST (Updated: 11 April 2021 8:39 PM IST)
t-max-icont-min-icon

விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா சிகடேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.

கர்நாடகா,

இங்கிருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று குடிநீர் மேல்நிலை தொட்டியை, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் விஷ பாட்டில் மூடி திறக்கப்பட நிலையில் கிடந்தது. அதாவது விளை பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்து என்பது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் மேல்நிலை தொட்டியில் மர்மநபர்கள் யாரோ விஷம் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல்நிலைத்தொட்டியில் இருந்து தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஹரப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து கூறிய கருணாகர ரெட்டி எம்.எல்.ஏ., குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story