குடிசை நூலகத்தில் தீ; 11 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து நாசம்


குடிசை நூலகத்தில் தீ; 11 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 11 April 2021 8:48 PM IST (Updated: 11 April 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

மைசூரு டவுன் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சையித் ஈசாக். இவர் கன்னட மொழி மீது தீராத பற்றுக்கொண்டவர்.

கர்நாடகா,

கடந்த 2011-ம் ஆண்டு அவர் ராஜீவ் நகரில் குடிசை அமைத்து நூலகம் அமைத்தார். அங்கு சுமார் 20 ஆயிரம் புத்தகங்கள் வைத்திருந்தார். இந்த நூலகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களும், அறிவுத்திறனை வளர்க்க பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிசையிலான நூலகத்தில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ அங்கிருந்த புத்தகங்களில் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, நூலகத்தில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் சுமார் 11 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து நாசமானது. இதனால் சையத் ஈசாக் கவலை அடைந்துள்ளார். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story