தொழிலாளர்கள் நின்று கொண்டு பயணம்; தனியார் நூற்பாலை பஸ் டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


தொழிலாளர்கள் நின்று கொண்டு பயணம்; தனியார் நூற்பாலை பஸ் டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 11 April 2021 9:10 PM IST (Updated: 11 April 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நூற்பாலை பஸ் டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் பஸ்நிலையம் அருகே நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நூற்பாலை பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அரசின் விதிமுறைகளை மீறி தொழிலாளர்கள் சிலரை நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த பஸ் டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் மாலை நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் முககவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று நகராட்சி சார்பில் சந்தைபேட்டைபுதூர், முல்லைநகர் மற்றும் கொசவம்பட்டி பகுதிகளில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story