பங்குனி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை


பங்குனி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 11 April 2021 9:15 PM IST (Updated: 11 April 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

தளி
பங்குனி அமாவாசையையொட்டி திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 சிறப்பு பூஜைகள்
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
 அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றார்கள்.
பஞ்சலிங்க அருவி
அந்தவகையில் நேற்று பங்குனி அமவாசையை முன்னிட்டு மும் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர். அதைத்தொடர்ந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்துவிட்டு அடிவாரப்பகுதிக்கு வந்தனர். 
பின்னர் வரிசையில் நின்று மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அணைப்பகுதிக்கு சென்று அங்கு அமர்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.நேற்று அமாவாசையையொட்டி பஞ்சலிங்க அருவி, கோவில் மற்றும் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 

Next Story