நவீன எந்திரம் மூலம் ரெயில் தண்டவாளம் மாற்றியமைப்பு
கோவை ரெயில் நிலையத்துக்கும், வடகோவை ரெயில் நிலையத்துக்கும் இடையில் நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் மாற்றி அமைக்கப்படுகிறது.
கோவை
கோவை ரெயில் நிலையத்துக்கும், வடகோவை ரெயில் நிலையத்துக்கும் இடையில் நவீன எந்திரம் மூலம் தண்டவாளம் மாற்றி அமைக்கப்படுகிறது.
ரெயில் தண்டவாளம்
ரெயில் தண்டவாளங்கள் மற்றும் அதை தாங்கி நிற்கும் ஸ்லீப்பர் கட்டைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு தகுந்தாற்போல் மாற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவை ரெயில் நிலையத்துக்கும், வடகோவை ரெயில்நிலையத்துக்கும் இடையில் உள்ள சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் ரெயில் தண்டவாளத்தை மாற்றி அமைக்கும் பணி நடந்தது.
இந்த பணிகள் நவீன எந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டன. அதன் பெயர் டி.ஆர்.டி. (டிராக் ரெனிவியூல் டிரெயின்). இது தண்டவாளத்தில் செல்லக்கூடியது.
300 அடி நீளமுள்ள அந்த எந்திரத்தின் ஒரு பகுதி பழைய தண்டவாளத்தை ஸ்லீப்பர் கட்டைகளோடு அப்படியே பெயர்த்து எடுத்து விட்டு அதன் கீழ் உள்ள கருங்கல் ஜல்லிகளை இரண்டு புறமும் ஒதுக்கி விடுகிறது.
தானியங்கி எந்திரம்
இதையடுத்து மற்றொரு எந்திரம் புதிய ஸ்லிப்பர் கட்டைகளை வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக தரையில் இறக்கி வைக்கிறது. இந்த பணிகள் ஒரே நேரத்தில் நடக்கிறது.
பழைய ஸ்லீப்பர் கட்டைகள் ஒருபுறம் அகற்றப்பட மறுபுறம் புதிய ஸ்லீப்பர் கட்டைகள் தரையில் இறக்கி வைக்கப்படுகின்றன.
புதிய ஸ்லீப்பர் கட்டைகளை குறிப்பிட்ட இடைவெளியில் வைத்த பின்னர் அதில் புதிய தண்டவாளத்தை எந்திரம் தானாகவே பொருத்தி விடுகிறது.
2 தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள தூரத்தை எந்திரமே கணக்கிட்டு சரி செய்து விடுகிறது. புதிய தண்டவாளம் பொருத்தப்பட்ட பின்னர் அதன் மீது எந்திரம் மெதுவாக நகர்ந்து உடனடியாக தண்டவாளத்தின் தாங்கும் திறனும் பரிசோதிக்கிறது.
4 மணி நேரத்தில் 500 மீட்டர் தூரம்
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பழைய தண்டவாளத்தை மாற்றி உடனுக்குடன் புதிய தண்டவாளம் அமைக்கும் பணியில் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
புதிய தண்டவாளங்கள் அமைக்கும் டி.ஆர்.டி. எனப்படும் எந்திரங்கள் தென்னக ரெயில்வேயில் 2 உள்ளது. அதில் ஒன்று சேலம் கோட்டத்தி லும், மற்றொன்று திருவனந்தபுரம் கோட்டத்திலும் உள்ளது.
ஆட்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க எந்திரம் மூலம் மட்டுமே தண்டவா ளங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
இந்த எந்திரம், 4 மணி நேரத்தில் 500 மீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் தண்டவாளம் அமைக்கும் திறன் கொண்டது.
தங்கும் வசதி
இங்கு முன்பு பொருத்தப்பட்ட கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள் ஒவ்வொன்றும் 250 கிலோ எடை கொண்டது. ஆனால் தற்போது புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்லீப்பர் கட்டைகள் ஒவ்வொன்றும் 350 கிலோ எடை கொண்டது.
இதன் மூலம் அதிக பாரம் கொண்ட ரெயில் பெட்டிகள் மற்றும் சரக்கு ரெயில்கள் அதிக வேகத்துடன் செல்ல முடியும். இந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் எந்திரத்துடன் இணைக்கப்பட்ட பெட்டியில் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story