திருவண்ணாமலை; தேர்தல் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கி 2 பேர் கைது
திருவண்ணாமலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் முன்விரோதம்
திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சரத் (வயது 30), தொழிலாளி. இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சரத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன், பிரபு உள்ளிட்ட சிலருக்கும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தேர்தல் முன்விரோதம் காரணமாக வ.உ.சி. நகரை சேர்ந்த சரவணன், பிரபு, சிவா, சிவசங்கர், அஜித், மாரி, ரஞ்சித், குமார் ஆகிய 8 பேர் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரத் வீட்டிற்கு சென்றனர்.
சரமாரி தாக்குதல்
அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டின் கதவை உடைத்தனர். சரத் வெளியே வராததால், அவர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி அவரை சரமாரியாக தாக்கினர்.
இதனை தடுக்க வந்த சரத்தின் மனைவி மைதிலி, உறவினர் விநாயகம் ஆகியோரையும் தாக்கினர். இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் சரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
படுகாயம் அடைந்த சரத், மைதிலி, விநாயகம் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
2 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் (40), மாரி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story