கிணத்துக்கடவு அருகே நிலத்தகராறில் காவலாளியை தாக்கிய விவசாயி கைது


கிணத்துக்கடவு அருகே நிலத்தகராறில் காவலாளியை தாக்கிய விவசாயி கைது
x
தினத்தந்தி 11 April 2021 9:24 PM IST (Updated: 11 April 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே நிலத்தகராறில் காவலாளியை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் ராஜன். ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஆவார். இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் சொக்கனூரில் உள்ளது. 

அந்த நிலத்தை கண்காணிக்க சொக்கனூரை சேர்ந்த கிட்டுசாமி (வயது 60) என்பவர் காவலாளியாக நியமிக்கப்பட்டு உள்ளார். ராஜனுக்கும், அவரது உறவினரான விவசாயி முத்துக்குமார் (53) என்பவருக்கும் இடையே சொக்கனூரில் உள்ள நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

 இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடத்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார், அரவது மனைவி மனோன்மணி (46) ஆகியோர் சொக்கனூரில் உள்ள நிலத்தில் குடிசை அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை காவலாளி கிட்டுசாமி தடுத்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், மனோன்மணி ஆகியோர் சேர்ந்து காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துகடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மனோன்மணியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story