வீரபாண்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு


வீரபாண்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 11 April 2021 9:58 PM IST (Updated: 11 April 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் 5 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் ராம்நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார் (வயது 32). ராணுவ வீரர். இவரது மனைவி திவ்யபிரதீபா (28). ஜெகதீஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். 
இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி அவர், தனது மனைவி திவ்யபிரதீபாவுடன் வத்தலக்குண்டுவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் அவர்களது வீடு பூட்டிக்கிடந்தது. 
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடி சென்றனர். இதற்கிடையே வீட்டிற்கு திரும்பி வந்த ஜெகதீஷ்குமார், கதவு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story