வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வனபத்ரகாளியம்மன் கோவில்
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரை யோரத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், இங்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்த கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அலங்கார பூஜைகள்
தொடர்ந்து அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப் பட்டது. பின்னர் காலை 6 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது அம்மன் மஞ்சள் காப்பு அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையைடுத்து அங்கு வந்த பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் முத்தமிழ், விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பீமன் பகாசூரன் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பயபக்தியுடன் வழிபட்டனர்
பின்னர் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு பெண்கள் எலுமிச்சை தீபமேற்றியும் குண்டம் இறங்குதல் இடத்தில் பக்தர்கள் உப்பைதூவிவும் அம்மனை மனதில் நினைத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story