மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தோகைமலை,
தோகைமலை அருகே உப்பிலியபட்டியை சேர்ந்தவர் முனீஸ்குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டு விட்டு, தோகைமலை- பாளையம் மெயின் ரோட்டில் தனது சித்தப்பா மகன் பெருமாளுடன் நின்று கொண்டு பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவகாட்டுபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முனீஸ்குமார், பெருமாள் மீது மோதியதில், படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story