அமாவாசை சிறப்பு பூஜை


அமாவாசை சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 11 April 2021 10:25 PM IST (Updated: 11 April 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாத சர்வ அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாத சர்வ அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

 இதையொட்டி முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

அவர்களுக்கு அரசு வழிகாட்டுதல்படி அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story