குவிந்து கிடக்கும் குப்பைகளில் திடீர் தீ விபத்து
குவிந்து கிடக்கும் குப்பைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்யல்
புன்னம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை புன்னம் சத்திரம் அருகே உள்ள பெருமாள் நகரில் கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்தநிலையில் நேற்று திடீரென குப்பைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து புன்னம் ஊராட்சி கவுன்சிலர் தங்கவேல் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் பெருமாள்நகர் பகுதிக்கு சென்று அங்கு குப்பைகள் மற்றும் அருகில் உள்ள புல் பூண்டுகளை வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் குப்பைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியில் புகைமண்டலமாக காட்சியளித்தது.
Related Tags :
Next Story