வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வால்பாறை,
வால்பாறையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் போலீசார் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு அட்டகட்டி, வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழக-கேரள எல்லையான மளுக்கப்பாறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்கள், வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை நகரில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் வருபவர்களுக்கு வால்பாறை போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும் நகரில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து அபராதம் விதிக்கும் பணியை தீவிரமாக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் பஸ் நிறுத்தங்களில் காத்திருப்பவர்கள், பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கும் போலீசார் விதித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story