முன்னோர்களுக்கு காவிரி ஆற்று பகுதிகளில் பொதுமக்கள் தர்ப்பணம்
அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு காவிரி ஆற்று பகுதிகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
நொய்யல்
தை, ஆடி, புரட்டாசி, பங்குனி மாதங்களில் உள்ள முக்கிய திதி நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தலங்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதேபோல் நேற்று பங்குனி மாத அமாவாசை முன்னிட்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் தங்களது இறந்துபோன முன்னோர்களுக்கு ெபாதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். முன்னதாக தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றிற்கு பொதுமக்கள் வந்து குடும்பத்தினருடன் நீராடினர்.
பின்னர் அங்குள்ள புரோகிதர்கள் மூலம் மாவு, எள், தேன் உள்ளிட்டவற்றை கொடுத்து நன்கு பிசைந்து உருண்டையாக்கி வாழை இலையில் வைத்து பொதுமக்கள் அமர வைத்து புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி காவிரியில் கரைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தங்களது வீடுகளுக்கு சென்று படையல் போட்டு சாமி தரிசனம் செய்து முன்னோர்களை வணங்கி விரதம் விட்டனர்.
Related Tags :
Next Story