நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரி உள்பட 85 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 12,532 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரி உள்பட 85 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 12,532 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 April 2021 11:22 PM IST (Updated: 12 April 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வேளாண்மை அதிகாரி உள்பட 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12,532 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் வேளாண்மை இணை இயக்குனர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், உதவி பேராசிரியர்கள், மின்வாரிய கணக்காளர் உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,532 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 55 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 366 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story