மக்கள் நீதிமன்றம்


மக்கள் நீதிமன்றம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான மாரியப்பன் வரவேற்றார். நீதிபதிகள் பரிமளா, காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலுவையில் இருந்த 4,610 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 2,561 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.8 கோடியே 18 லட்சம் நிலுவைத்தொகை வசூலாக வாய்ப்பு ஏற்பட்டது. இ்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியான முத்து சாரதா தலைமை தாங்கி பேசியதாவது:- 
நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறும் போது நீதிபதிகளாகிய நாங்கள் சட்டப்படிதான் தீர்ப்பு வழங்க முடியும். ஆனால் இது போன்ற மக்கள் நீதிமன்றத்தில் உங்களுடைய வழக்குகளை பரிசீலினை செய்யும் போது இரு தரப்பினரின் குறைகளை நாங்கள் கேட்டறியவும்,  இரு தரப்பினரும் அவர்களது முடிவுகள் பற்றி கூறவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இரு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது என கூறினார்.  
 இதில் நீதிபதிகள் கதிரவன், சுந்தரி, சந்திரகாசபூபதி, பரம்வீர், சிவ ராஜேஷ், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜகோபால், சிவசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. 

Next Story