காந்தி விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


காந்தி விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 April 2021 12:09 AM IST (Updated: 12 April 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

அகிம்சை மற்றும் பிற காந்திய கொள்கைகளை வலியுறுத்தி சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக சிறப்பான பங்காற்றியவர்கள் அமைதிக்கான காந்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

அகிம்சை மற்றும் பிற காந்திய கொள்கைகளை வலியுறுத்தி சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக சிறப்பான பங்காற்றியவர்கள் அமைதிக்கான காந்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர்  தெரிவித்து உள்ளார்.

காந்தி விருது

இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அகிம்சை மற்றும் பிற காந்திய கொள்கைகளை வலியுறுத்தி சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக சிறப்பான பங்களிப்புக்காகவும், மனித சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி மற்றும் சமூகநீதிக்கான பங்களிப்பு செய்தமைக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைதிக்கான காந்தி விருது வழங்கப்படுகிறது.. தேசியம், இனம், மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில்...

 மேலும் இவ்விருதுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட படைப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளும் இவ்விருதுக்கு தகுதியானதாக பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது 2021-ஆம் ஆண்டிற்கு அமைதிக்கான காந்தி விருது பெறுவதற்கு தகுதியான நபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய தனிநபர்களும் நிறுவனங்களும் இவ்விருதுக்கு www.indiaculture.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story