முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்
x
தினத்தந்தி 12 April 2021 12:09 AM IST (Updated: 12 April 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதத்தை போலீசார் விதித்தனர்.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதத்தை போலீசார் விதித்தனர். 
முக கவசம் 
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்ேவறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
அத்துடன் வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. 
விழிப்புணர்வு பிரசாரம் 
முக கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். 
 ஆலங்குளம், டி.கரிசல்குளம், கொங்கன்குளம், வலையபட்டி மேலாண்மறைநாடு, அப்பையநாயக்கர் பட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், கீழாண் மறைநாடு, ஏ.லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், போலீசாருடன் சென்று கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கண்டிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினர். 
அபராதம் 
 இதையடுத்து முக்கிய இடங்களில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல்குளத்தில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் அந்த வழியாக வந்த 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். 

Next Story