அமாவாசை யாகம்


அமாவாசை யாகம்
x
தினத்தந்தி 12 April 2021 12:18 AM IST (Updated: 12 April 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

அகோர காளியம்மன் கோவிலில் அமாவாசை யாகம் நடந்தது.

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழ வெள்ளூர் கிராமம்.இங்கு பிரசித்தி பெற்ற ஜெயம் தரும் அகோர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் கோவில் நிர்வாகி மணிகண்டன் குருக்கள் தலைமையில் உலக நன்மைக்காக சிறப்பு யாக பூஜைகள் நடைபெறும். யாக பூஜையில் திருப்புவனத்தை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்று பங்குனி மாத அமாவாசை பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஜெயம் தரும் அகோர காளியம்மனுக்கு யாக பூஜை நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story