திருநல்லூரில் மீன்பிடித் திருவிழா
திருநல்லூரில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே திருநல்லூர் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் அதிகளவு மீன்கள் உள்ளன. தற்போது இந்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. இந்தநிலையில் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் பஸ் போன்ற வாகனங்களில் வந்து இறங்கினர். இதனையடுத்து திருநல்லூர் பகுதியில் மீன்பிடி திருவிழா களை கட்டியது. பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மீன்வலை, சேலை, வேட்டியுடன் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். பிடிப்பட்ட மீன்களுடன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story