பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
பணகுடி, ஏப்:
பழவூரில் நாறும்பூநாதர் கோவில் தலவிருட்சமாக அதிசய சரக்கொன்றை மரம் உள்ளது. மரத்தின் அடிப்பாகம் கோவில் உள்பிரகாரத்திலும், மேல்பாகம் கோவில் மேல் மண்டபத்திற்கு வெளிப்பகுதியிலும் செழித்து வளர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் இறுதியில் தொடங்கி சித்திரை மாதம் முதல் வாரம் வரையிலும் கொன்றை மரம் முழுவதும் அடி முதல் நுனிவரை பூத்து குலுங்கும்.
இவ்வாண்டும் கோவில் தலவிருட்சமான அதிசய சரக்கொன்றை மரம் தற்போது பூத்து குலுங்குவதை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து வருகின்றனர். சித்திரை முதல் தேதியில் கொன்றை மலரால் சிவபெருமானை வழிபாடு செய்வது பெரும் பாக்கியம் என்பதும், கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் சித்திரை முதல் தேதியில் கனி காணுதல் வைபவத்திற்கும், இறைவன் வழிபாடு நிகழ்வுக்கும் கொன்றை மலர் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும்.
Related Tags :
Next Story