விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 April 2021 12:56 AM IST (Updated: 12 April 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள சொக்கம்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் நடராஜன் (வயது 71). இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6-ந் தேதி மாலை வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷ மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது மகன் சுரேஷ், தந்தையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story