முயல் வேட்டை திருவிழா


முயல் வேட்டை திருவிழா
x
தினத்தந்தி 12 April 2021 12:56 AM IST (Updated: 12 April 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

லாடபுரம், அம்மாபாளையம் கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படவில்லை. கொரோனாவினால் இந்த ஆண்டும் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், சித்திரை மாதத்தில் முயல் வேட்டை திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்று கருதப்பட்டது. இதனால் சித்திரை மாதம் பிறப்பதற்கு முன்பாகவே லாடபுரம், அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அந்த கிராமங்களில் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு ஒருவர் மாரியம்மன் கோவில் முன்பு கூடினர். அம்மனுக்கு பூஜை முடிந்தபின்பு, அங்கிருந்து அவர்கள் முயல் வேட்டைக்கு காட்டுப்பகுதிக்கு புறப்பட்டனர். இதையடுத்து வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் நேற்று மாலை கிராமத்துக்கு வந்தனர். பின்னர் முயல் கறியை அம்மனுக்கு படையலிட்டு, சமமாக பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் முயல்கறியை சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

Next Story