பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்தம் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு


பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்தம் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 12 April 2021 1:08 AM IST (Updated: 12 April 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி, 

பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாநில பொதுக்குழு

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் அதன் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் காரல்மார்க்ஸ், ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தில் சுங்கம் வசூலிக்கும் பணிகளில் 10 முதல் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களையும் பணிவரன் முறைப்படுத்தி, பணி பாதுகாப்பும் ஊதியம் நிர்ணயமும் செய்திடல் வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பலன்களும் பாதுகாப்பும், 450 நாட்களும் அதற்கு மேலாக தொடர் பணியில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கி சம வேலைக்கு சம ஊதியம் என்ற சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை அமலாக்க வேண்டும்.

சட்ட விரோத நிர்பந்தம்

தமிழ்நாட்டின் அனைத்து சுங்கச்சாவடி மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஒரே சீரான சம்பளமும், சலுகைகளும் நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மாறும்போது பணியாளர்களிடம் புதிய நிபந்தனைகளை விதிப்பது, தொழிலாளர்களை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்துவது, ஆண்டுதோறும் வேலை கோரி புதிய விண்ணப்பம் அளிக்கும்படி சட்டவிரோத நிர்பந்தப்படுத்துதல் நிறுத்தப்படவேண்டும்.
தானியங்கி சுங்க வசூல் முறை அமலுக்கு கொண்டு வரப்படும் போது பணியாளர்கள் யாரையும் ஆட்குறைப்பு செய்யாமல் சுங்க வசூல் பிரிவில் உள்ளவர்களுக்கு சாலை பராமரிப்பு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. 

வேலை நிறுத்த போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய நிர்ணயம் பணியிட பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட கோரியும் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுப்பது என்றும் மே 15-ந் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் ஆணையம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தவறினால் மே 20-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story