கள் விற்றதாக கணவன்- மனைவி கைது
கடையநல்லூர் அருகே கள் விற்றதாக கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர், ஏப்:
கடையநல்லூர் அருகே உள்ள செண்பகநல்லூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சிலர் கள் விற்பதாகவும், அதில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்கிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கள் விற்றுக் கொண்டு இருந்ததாக வாசுதேவநல்லூர் அருகே உள்ள டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் கோசாலை (வயது 49), அவரது மனைவி சித்ரா (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story