சோமனூரில் மில்லில் தீ விபத்து


மில்லில் தீ விபத்து
x
மில்லில் தீ விபத்து
தினத்தந்தி 12 April 2021 1:22 AM IST (Updated: 12 April 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

சோமனூரில் சைசிங் மில்லில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கருமத்தம்பட்டி,

கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ளது செந்தில் நகர். இங்கு தனியாருக்கு சொந்தமான சைசிங் மில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மில்லில்தொழிலாளர்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இரவு 9 மணி அளவில் திடீரென சைசிங் மில்லில் தீப்பிடித்து எரிந்தது. 

இது குறித்து அக்கம், பக்கத்தினர் அவினாசி, அன்னூர், சூலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு உடனடியாக தகவல் அளித்தனர். 

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் சேதம் அடைந்ததாக தெரிவித்தனர்.

Next Story