சட்டமன்ற தேர்தல் மோதலில் அ.தி.மு.க. பிரமுகரின் தந்தை சாவு


சட்டமன்ற தேர்தல் மோதலில் அ.தி.மு.க. பிரமுகரின் தந்தை சாவு
x
தினத்தந்தி 12 April 2021 1:34 AM IST (Updated: 12 April 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் சட்டமன்ற தேர்தல் மோதலில் அ.தி.மு.க. பிரமுகரின் தந்தை இறந்தார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது வயல்சேரி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் மோதி கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் அ.தி.மு.க. பிரமுகர் ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணனை(75) சிலர் மண்வெட்டியால் தாக்கி உள்ளனர். காயமடைந்த நாராயணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான செந்தில்நாதன், மானாமதுரை எம்.எல்.ஏ.நாகராஜன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தேர்தல் மோதலில் அ.தி.மு.க. பிரமுகரின் தந்தை இறந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story