ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.
ஈரோடு
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.
வரத்து அதிகம்
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு தர்மபுரி, மேச்சேரி, தாளவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து அதிகமாக உள்ளது. வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
விலை பாதியாக குறைந்து இருப்பதால், பொதுமக்களும் அதிகமாக தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
விலை வீழ்ச்சி
ஈரோடு மார்க்கெட்டுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தினமும் தலா 15 கிலோ எடை கொண்ட 2 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது 4 ஆயிரம் பெட்டிகள் வருகிறது. தக்காளியின் வரத்து அதிகமாக இருப்பதால் விலை பாதியாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. அதாவது 15 கிலோ எடை கொண்டு ஒரு பெட்டி ரூ.120-க்கு விற்பனையாகி வந்தது. அதுவே தற்போது ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது.
சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. வரத்து அதிகமாக இருப்பதால் விற்பனை செய்ய முடியாத தக்காளியை பாதுகாக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மிக குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story