அந்தியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கு


அந்தியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கு
x
தினத்தந்தி 12 April 2021 2:47 AM IST (Updated: 12 April 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கை பிடிக்க கோரிக்கை

அந்தியூர்
அந்தியூர் பகுதியில் குரங்கு ஒன்று சுற்றித் திரிகிறது. இது அங்குள்ள டீ கடை, மளிகை கடை, பெட்டி கடைக்குள் புகுந்து வருகிறது. அப்போது வியாபாரிகள் குரங்கை விரட்ட முயன்றால் அவர்கள் மீது பாய்ந்து விடுகிறது. மேலும் அங்கிருக்கும் பொருட்களை குரங்கு எடுத்துச் செல்வதுடன் சேதப்படுத்தியும் விடுகிறது. வீட்டு கதவு திறந்திருந்தால் உள்ளே சென்று பாத்திரங்களையும், உணவு பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குரங்கு அச்சுறுத்தி வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினர் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story