தேக்கம்பட்டி காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது-நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

தேக்கம்பட்டி காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது-நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 12 April 2021 3:38 AM IST (Updated: 12 April 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் தேக்கம்பட்டி காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

சேலம்:
சேலம் தேக்கம்பட்டி காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தீவிர ரோந்து
சேலம் அருகே உள்ள தேக்கம்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை வனப்பகுதிகளில் வன விலங்குகளை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி வனச்சரகர் சின்னத்தம்பி தலைமையில் வனவர்கள் மோகன், பாலசுப்பிரமணியன், வனகாப்பாளர்கள் கோபிநாத், பிரகாஷ், அசோக்குமார், தனபால், விஜயகுமார், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேக்கம்பட்டி பிரிவு குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மொபட்டில் 2 பேர் கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த மாதையன் (வயது 52), பெரியசாமி (28) என்பது தெரிந்தது.
2 பேர் கைது
தொடர்ந்து விசாரணை நடத்திய போது, இருவரும் வனப்பகுதிகளில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குளை வேட்டையாட வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story