மேட்டூர் உபரிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பார்வையிட்டார்
மேட்டூர் உபரிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பார்வையிட்டார்.
மேட்டூர்:
தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அணையின் ஒரு கரையை உடைத்து உபரி நீர் திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். இந்தத் திட்டத்தால் டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இது டெல்டா பாசன விவசாயிகளின் நெஞ்சை பிளக்கும் செய்தியாக உள்ளது. இதனை செயல்படுத்தியவர்களும், இதற்கு உறுதுணையான அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story