வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாள் மணிமண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
வீரர் சுநத்ரலிங்கம் பிறந்தநாளை முன்னிட்டு, அரரது மணிமண்டபத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்த அனுமதி இல்லை என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பிறந்த நாள்
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 16-ந் தேதி ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், மேலும் பொதுமக்களின் நலன் கருதியும், கொரோனோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
அனுமதி இல்லை
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். ஆனால் பொதுமக்கள் யாரும் கூடாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
எனவே சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாளையொட்டி கவர்னகிரியில் உள்ள மணிமண்டபத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story