முத்தையாபுரத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்


முத்தையாபுரத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 12 April 2021 6:55 PM IST (Updated: 12 April 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயமாகி விட்டார்.

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னலட்சுமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் இசக்கி இந்திரா (வயது 24). இவரது கணவர் பாலமுருகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இவரது தாய் அன்னலட்சுமி கோவில்பட்டிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது இசக்கி இந்திரா கைக்குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான இசக்கி இந்திராவை தேடி வருகிறார்.

Next Story