ஊட்டி ரெயில் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
ஊட்டி ரெயில் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு.
ஊட்டி,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஊட்டி-குன்னூர் இடையே தினமும் 3 முறை மலைரெயில் இயக்கப்படுகிறது. இதில் வெளி மாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊட்டி ரெயில் நிலைய அதிகாரிக்கு( ஸ்டேஷன் மாஸ்டர்) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடம் என்பதால் ரெயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி ஊழியர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள், மாஸ்டர் அறை, வளாகங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story