கோவையில் 604 பேருக்கு கொரோனா


கோவையில்  604 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 April 2021 8:37 PM IST (Updated: 12 April 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 604 பேருக்கு கொரோனா

கோவை

கோவையில் மேலும் 604 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார்.

604 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட கொரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 604 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 808 ஆக உயர்ந்தது.

பெண் பலி

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப் பட்ட 283 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

அதன்படி இதுவரை 58 ஆயிரத்து 730 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 4,578 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்ட 50 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனால் பலி எண்ணிக்கை 700-ஆக உயர்ந்தது.


Next Story