கிராமிய கலைஞர்கள் மேளதாளத்துடன் மனு
கொரோனா தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில் செய்ய அனுமதிக்க கோரி ராமநாதபுரத்தில் கிராமிய கலைஞர்கள் மேளதாளத்துடன் திரளாக வந்து மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
கொரோனா தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில் செய்ய அனுமதிக்க கோரி ராமநாதபுரத்தில் கிராமிய கலைஞர்கள் மேளதாளத்துடன் திரளாக வந்து மனு அளித்தனர்.
கிராமிய கலைஞர்கள்
ராமநாதபுரம் மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் மருங்கன், செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் கிராமிய கலைஞர்கள் மேளதாளத்துடன் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனால் கிராமிய கலைஞர்களாகிய நாங்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமே கோவில திருவிழாக்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் மூலம்தான் பெரும்பாலும் கிடைக்கிறது.
முந்தைய காலம்போல கலைநிகழ்ச்சிகளுக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் கோவில்களின் நிகழ்ச்சிகளின் மூலம்தான் சொற்ப வருவாய் ஈட்டி பிழைத்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் இவ்வாறு தடை விதித்திருப்பதால் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். கொரோனா பரவல் காரணமாக தவிர்க்க முடியாதபட்சத்தில் பெரிய கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்தாலும் சிறிய கிராமப்புற கோவில்களில் எங்களை போன்றவர்களின் வாழ்க்கை நிலையை கருதி நிகழ்ச்சியை நடத்த தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
நிவாரணம்
அதற்கு வழியில்லாவிட்டால் கிராமிய கலைஞர்களின் குடும்பத் தினருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அமைதியாக இருந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென கிராமிய கலைஞர்கள் மேளதாளம் முழங்க நாதஸ்வரம் இசையுடன் திரளாக வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story