கேட்பாரற்று கிடக்கும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய பெயர் பலகை
கேட்பாரற்று கிடக்கும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய பெயர் பலகை
குடிமங்கலம்
குடிமங்கலம் ஒன்றியத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மானாவாரி சாகுபடி மற்றும் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் பெதப்பம்பட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தென்னை வணிக வளாகம் ஆகியவை அமைந்துள்ளன. பொள்ளாச்சி-தாராபுரம் ரோட்டில் விரிவாக்க மையத்திற்கு செல்லும் வழியை காட்டும் வகையில் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்தது. பெதப்பம்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு தினமும் ஏராளமான விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி தாராபுரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணியின் போது ரோட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை தற்போது ரோட்டின் அருகே கீழே கிடக்கிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி பெயர் பலகையை அதே இடத்தில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story