அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து


அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து
x
தினத்தந்தி 12 April 2021 9:34 PM IST (Updated: 12 April 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து

அவினாசி
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், சுந்தரர் பதிகம் பாடிய திருத்தலமாகவும், தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் என்பன உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்றுள்ளதாக விளங்குகிறது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த பல வருடங்களாக சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகமானதாலும் ஊரடங்கு இருந்ததாலும் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் வருகிற 17-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற இருந்தது. அதற்கான முன்னோட்டப்பணிகள் அனைத்தும் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துவந்தனர்.
 இதனால் இந்த வருடமாவது தேரோட்டம் நடைபெறும் என்று பக்தர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசு ஆணை 342-ன் படி கோவில்களில் திருவிழாக்கள், மதம் சம்மந்தப்பட்ட கூட்டங்களுக்கு தடைசெய்யப்பட்டது. ஆகவே 2-வது ஆண்டாக இந்த வருடமும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில் வழக்கம்போல் தேர்த்திருவிழா நிகழ்வு நடைபெறும் நாட்களில் சாமிக்கு நடைபெறும் பூஜைகள், அபிஷேகம், ஆகியவை கோவிலுக்குள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Next Story