மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்


மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து  கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 12 April 2021 9:36 PM IST (Updated: 12 April 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் அருகே மயானத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலங்காநல்லூர்,ஏப்.
அலங்காநல்லூர் அருகே மயானத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயானத்தை மாற்ற முடிவு
அலங்காநல்லூர் அருகே உள்ள ரெங்கராஜபுரம் கிராமத்தில் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலை பூதகுடி பிரிவு அருகே மயானம் அமைந்துள்ளது.
இந்த மயானத்தை அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மயானம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி பொதுப்பணித்துறையினர் மயானத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மறியல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானம் அருகே உள்ள மெயின் சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் மற்றும் மதுரை வடக்கு தாலுகா வருவாய் துறை அலுவலர்கள் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர். பின்னர் மறியலில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தில் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து தடைபட்டது. கிராமத்தில் அதே இடத்தில் மயானம் இருக்க வேண்டும், மயானத்துக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் கொடுத்தனர்.

Next Story