திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
111 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மேலும் 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசின் விதிமுறைகளை...
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது. இதில், 19 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story