மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமானோர் மனு கொடுக்க வந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை.
எனினும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு வசதியாக புகார் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் அதில் மனுக்களை போட்டு சென்றனர்.
மேலும் அவ்வாறு வருபவர்களை போலீசார் முழுமையாக சோதனை செய்தபின்னரே அனுமதித்தனர். இதற்கிடையே ஒரு வயதான தம்பதி ஒரு பையுடன் அங்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் மண்எண்ணெய் கேன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்ததோடு, அவர்களை போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஆத்தூர் தாலுகா ஆலமரத்துபட்டியை சேர்ந்த தர்மராஜ் (வயது 62) மற்றும் அவருடைய மனைவி செல்லமணி என்பதும், அவர்களுடைய நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மிரட்டியதால் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு, போலீசார் உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story