நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை செஞ்சியில் பரபரப்பு


நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை செஞ்சியில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 April 2021 9:52 PM IST (Updated: 12 April 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

முற்றுகை

செஞ்சி,

செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு நேற்று 650-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 18 ஆயிரம் நெல்மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 500 விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. மற்றவர்களின் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) அரசு விடுமுறை என்பதால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படாது. அது வரை எங்களால் காத்திருக்க முடியாது. எனவே எங்களது நெல்மூட்டைகளையும் உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த  செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோர் விரைந்து சென்று விவசாயிகளை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story