முககவசம் அணியாத 30 பேரிடம் அபராதம் வசூல்


முககவசம் அணியாத 30 பேரிடம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 12 April 2021 10:06 PM IST (Updated: 12 April 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத 30 பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

முதுகுளத்தூர், 
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் முது குளத்தூர் பகுதிகளில் முக கவசம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வர்களிடம் போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறினார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணிய வேண்டும் என்று போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Next Story