முக கவசம் அணியாத பயணிகளை அரசு பஸ்களில் ஏற்ற வேண்டாம்
முக கவசம் அணியாத பயணிகளை அரசு பஸ்களில் ஏற்ற வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பஸ்களில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்லும் தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது பஸ் டிரைவர் மற்றம் கண்டக்டர்களை போக்குவரத்து துறையினரும், போலீசாரும் எச்சரிக்கிறார்கள். அபராதமும் விதிக்கப்படுகிறது.
கண்டக்டர்களுக்கு உத்தரவு
இந்த நிலையில் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சென்று விட்டு பஸ் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி முக கவசம் அணியாமல் அரசு பஸ்களில் ஏறும் பயணிகளை அனுமதிப்பதில்லை என்று போக்குவரத்து துறை அதிகாரி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அரசு பஸ் கண்டக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது முக கவசம் அணியாத பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story