பழனியில் 2 தெருக்களுக்கு ‘சீல்'


பழனியில் 2 தெருக்களுக்கு ‘சீல்
x
தினத்தந்தி 12 April 2021 10:51 PM IST (Updated: 12 April 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் 2 தெருக்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டன

பழனி:

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழனி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் சிகிச்சை அளிப்பதற்காக பழனியாண்டவர் கல்லூரியில் உள்ள ஒரு வளாகத்தில் 60 படுக்கை வசதியுடன் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பழனி பெரியப்பாநகர், ஜீவானந்தம் தெரு ஆகிய பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இ்தன் எதிரொலியாக அந்த 2 தெருக்களையும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றி, தகரத்தால் மூடி ‘சீல்' வைக்கப்பட்டுள்ளன. 

அங்கு வசிப்போருக்கு தேவையான உதவிகளை வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். மேலும் அந்த தெருக்களை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story