பென்னாகரம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 3 பேர் கைது 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்


பென்னாகரம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 3 பேர் கைது 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 April 2021 10:54 PM IST (Updated: 12 April 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முதுகம்பட்டி வனப்பகுதியில் மான்களை சிலர் வேட்டையாடுவதாக பென்னாகரம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து வனச்சரக அலுவலர் முருகன் மற்றும் வனத்துறையினர் மசக்கல் காப்புக்காடு பேகியம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது 4 பேர் மான்களை வேட்டையாடி எடுத்து வந்து கொண்டு இருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்களில் ஒருவர் தப்பியோடி விட்டார். மற்ற 3 பேரையும் வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

3 பேர் கைது

அப்போது அவர்கள் அத்திமரத்தூர் பகுதியை சேர்ந்த ராமர் (வயது 50), ஏர்கோல்பட்டியை சேர்ந்த முருகன் (48), முத்தையன் (52) என்பதும், வனப்பகுதியில் 2 மான்களை வேட்டையாடி எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துைறயினர் கைது செய்தனர். 
மேலும் அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய மோகன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story