காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்
அறந்தாங்கி, ஏப்.13-
அறந்தாங்கி அடுத்த அம்பாள்புரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் நிரஞ்சனா (வயது 22). இவரும் பிடாரிக்காட்டையை சேர்ந்த அன்புதமிழன் என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, நிரஞ்சனா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நிரஞ்சனாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் கொடுமைபடுத்தியதால் தான் நிரஞ்சனா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது பெற்றோர் புகார் கூறினர். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story