450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 April 2021 11:31 PM IST (Updated: 12 April 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை, ஏப்.13-
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள்
புதுக்கோட்டையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை வீடுகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு வீட்டில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
பறிமுதல்
மேலும் அங்கிருந்து புகையிலை பொருட்கள் 450 கிலோவிற்கு மேல் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Next Story