காரைக்குடி,
காரைக்குடி நகரில் வீடு, கடைகள், அரசு அலுவலகங்கள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி காணாமல் போனது. இதுகுறித்த புகார்களின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கழனிவாசல் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 20) என்பவர் இந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. அதனையொட்டி அஸ்வினை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின் பேரில் 6 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர்.